< Back
மாநில செய்திகள்
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக எம்.எல்.ஏ முனிரத்னம் நியமனம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக எம்.எல்.ஏ முனிரத்னம் நியமனம்

தினத்தந்தி
|
19 Jun 2024 9:22 PM IST

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவாக எம்.எல்.ஏ அசன்மவுலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக எம்.எல்.ஏ முனிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற பேரவை துணைத் தலைவராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம் எம்.எல்.ஏ., அவர்களும் மற்றும் கொறடாவாக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹெச்.அசன்மவுலானா எம்.எல்.ஏ., அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்