கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவ-மாணவிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
|மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவை செல்லும் வழியில் மாலை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வனக்கல்லூரி முதல்வர் க.தா. பார்த்திபன் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பாக சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணம் மற்றும் பலன் தரும் மரம் என்ற புத்தகத்தை வழங்கினார்.
அதன் பின்னர் வனக் கல்லூரி மாணவ மாணவிகளிடம் கல்லூரியில் என்னென்ன வசதிகள் உள்ளது, என்னென்ன பட்டப் படிப்புகள் உள்ளது என்று கேட்க அதற்கு மாணவ மாணவிகள் கல்லூரியில் அனைத்து வசதிகளும் உள்ளது. வனவியல் பட்டுப்புழுவியல் துறை என்ற இரண்டு பட்டப் படிப்புகள் உள்ளன என்று கூறியதற்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின்," மாணவ மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். கோவை செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் நகரில் ரோட்டின் இரண்டு புறமும் பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.