< Back
மாநில செய்திகள்
காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்பு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

மணல்மேடு அருகே காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்கப்படடார்.

மணல்மேடு:

மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் மனவெளி தெருவை சேர்ந்த முத்தையன் மனைவி ராஜகிளி (வயது 80). இவர் நீண்ட நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜகிளி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி முடிகண்டநல்லூர் ஆற்றங்கரையில் ராஜகிளி பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணல்மேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர், சம்பவ இடத்திற்கு சென்று ராஜகிளி உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன் பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்