< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மருந்தகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் - மதுரையில் பரபரப்பு
|19 May 2023 10:52 PM IST
மதுரையில் மர்மநபர்களால் மருந்தகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை,
மதுரையில் மர்மநபர்களால் மருந்தகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை, பழங்காநத்தம் பகுதியில் 20 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருபவர் ராஜா. இவரது மருந்தகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதிய உணவு இடைவேளைக்காக ஊழியர்கள் உணவருந்த சென்றதால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.