< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு
|9 Dec 2022 12:07 AM IST
லாலாபேட்டை அருகே 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு பிறந்தது.
லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் சில நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். அந்தக் கோழிகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு அடைக்காத்து வந்தது. நேற்று முன்தினம் அந்த முட்டைகள் பொரிந்து 10 கோழிக்குஞ்சுகள் அடுத்தடுத்து பிறந்தன. அதில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் 4 கால்கள் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.