ஆசிரியர் தினத்தையொட்டி 'மின்மினி' செயலி நடத்தும் 'கோட்' போட்டி
|ஆசிரியர் தினத்தையொட்டி ‘மின்மினி' செயலி நடத்தும் ‘கோட்' போட்டியில் வீடியோ பதிவிட்டு பரிசுகளை வெல்லலாம்.
சென்னை,
ஆசிரியர் தினத்தையொட்டி, மின்மினி செயலி சார்பில் கோட் - கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் என்ற போட்டியை நடத்துகிறது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் 'கோட்' என மிகவும் மதித்த, உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு உங்கள் நன்றியை தெரிவிக்கும் விதத்தில் ஒரு நிமிட வீடியோவை பதிவு செய்து அதை மின்மினி செயலியில் ஆங்கிலத்தில் 'ஹேஷ்டாக் கோட்' என்பதை சேர்த்து பதிவிடலாம். தேர்தெடுக்கப்படும் சிறப்பான பதிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.இதுகுறித்து மின்மினி செயலியின் செயல் துணைத்தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:-
கோட் போட்டி
பயனாளர்கள் மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் வீடியோக்களை பதிவேற்றலாம்.உங்கள் வாழ்வை மாற்றிய, 'கோட்' என நீங்கள் மதிக்கும் ஆசிரியர்கள் குறித்த உங்களது பதிவுகளை ஆங்கிலத்தில் 'ஹேஷ்டாக் கோட்' என்பதை சேர்த்து வருகிற 8-ந்தேதி இரவு 11 மணிக்குள் மின்மினி செயலியில் ஒரு நிமிட வீடியோவாக பகிர்ந்துகொள்ளலாம்.மின்மினி சார்பில் ஐந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு நாடுகளில்...
மின்மினி செயலி கடந்த ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது, அப்போது முதல் மிகுந்த வரவேற்பை பெற்று கடந்த 8 மாதத்தில் 4.5 லட்சம் டவுன்லோட்களை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழ் மக்கள் மின்மினியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.