< Back
மாநில செய்திகள்
அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது - டிரைவர் காயம்
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது - டிரைவர் காயம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:20 PM IST

அம்பத்தூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது.

அம்பத்தூர் கள்ளிகுப்பம் சாலையில் நேற்று மதியம் மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த கார், சாலையில் கவிழ்ந்து கிடந்த மினிவேன் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மினிவேன் டிரைவர் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மினிவேன் டிரைவரும், கார் டிரைவரும் சமாதானமாக பேசி சென்று விட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

விபத்து குறித்து மினிவேன் டிரைவரும், கார் டிரைவரும் புகார் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என அம்பத்தூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்