விழுப்புரம்
வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க கூட்டம்
|விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் பார்த்திபன், முருகானந்தம், வெங்கடேசன், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார், மாநில செயலாளர்கள் பாலமுருகன், ரமேஷ், சங்கர், பாபு, ஜெயவேல், தணிக்கையாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில், ஆட்சி அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும், உதவியாளர் பதவி உயர்வு பட்டியலை தமிழ்நாடு சார்நிலை பணி விதியின்கீழ் வெளியிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.