மதுரை
பிரசாத கூடத்தை திறந்து வைத்து தோசை சுட்ட அமைச்சர்கள்: கள்ளழகர் கோவிலில் 2 மாதத்தில் கும்பாபிஷேகம்- பக்தர்களுக்கு லட்டு வழங்கவும் ஏற்பாடு
|கள்ளழகர் கோவிலில் பிரசாத கூடத்தை திறந்து வைத்து அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி அதனை பார்வையிட்டு பிரசாத தோசை சுட்டனர். கள்ளழகர் ேகாவிலில் 2 மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படு்ம் என்றும், பக்தர்களுக்கு லட்டு வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்.
அழகர்கோவில்
கள்ளழகர் கோவிலில் பிரசாத கூடத்தை திறந்து வைத்து அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி அதனை பார்வையிட்டு பிரசாத தோசை சுட்டனர். கள்ளழகர் ேகாவிலில் 2 மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படு்ம் என்றும், பக்தர்களுக்கு லட்டு வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்.
நவீன பிரசாத தயாரிப்பு கூடம் திறப்பு
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ரூ.1 கோடி 18 லட்சத்தில் நவீன பிரசாத தயாரிப்பு கூடம், பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளழகர் கோவில் பிரசாத தோசை பிரசித்தி பெற்றது. அதன் தயாரிப்பு கூடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அங்கு தோசை சுடும் பணியையும் பார்வையிட்டனர்.
அமைச்சர் சேகர்பாபு, மூர்த்தி மாவு ஊற்றி பிரசாத தோசை சுட்டனர். அதன்பின்னர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 812 கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு உள்ளது. அதிக அளவில் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது தி.மு.க. அரசுதான். தமிழக அரசு, அறநிலையத்துறைக்கு ரூ.100 கோடி வரை மானியம் வழங்கியுள்ளது.
2 மாதத்தில் கும்பாபிஷேகம்
மேலும் அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ராஜகோபுர பணிகள் ஒரு மாதத்தில் விரைந்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்படும். இதைத்தொடர்ந்து கள்ளழகர் கோவிலுக்கும் 2 மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. அழகர்கோவில் நூபுரகங்கை சாலைக்கு வனத்துறையிடம் அனுமதி பெற்று ஒரிரு நாளில் பணி தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். கோவிலில் நவீன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, கலெக்டர் சங்கீதா, அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, உதவி பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, பேஸ்கார் முருகன், உதவி பேஸ்கார் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.