< Back
மாநில செய்திகள்
புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

தினத்தந்தி
|
3 Jun 2022 10:54 PM IST

ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பாரதி நகர் அருகே ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வருகிற 20-ந்ந் தேதி நடைபெறுகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மறுநாள் 21-ந்தேதி திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ.18,500 கோடி மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நூலகம் ஏழு அடுக்கு கொண்டது என்றார்.

அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர்கள் விழா நடைபெற உள்ள ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்