< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமைச்சர் உதயநிதி ஆய்வு எதிரொலி - 4 பேர் இடமாற்றம்
|10 Sept 2024 7:19 PM IST
பணிகளில் தொய்வில் காரணமாக 4 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 4 அலுவலர்கள் பணிகளில் தொய்வுடன் பணியாற்றியது தெரியவந்தது.
இந்த நிலையில், பணிகளில் தொய்வில் காரணமாக 4 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரையை சேர்ந்த வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.