< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டுவீட்
|18 May 2023 9:34 AM IST
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐ.ஏ.எஸ் நிலையிலான அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட் செய்துள்ள அவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் வரலாறு படைத்துள்ளதாகவும் மாற்றுத்திறனுடையோர் உரிமைகள் வெல்லட்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.