< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும்' - மத்திய மந்திரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
|19 March 2023 11:18 AM IST
37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விளையாட்டுத்துறை தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூருடன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை தமிழகத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அனுராஜ் சிங் தாக்கூர், ஒலிம்பிக் பயிற்சி திட்டத்தில் தங்குமிடம், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்குவதாக குறிப்பிட்டார்.