< Back
மாநில செய்திகள்
ஜெர்மனியில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கங்கள் வென்ற சேலம் பெண் மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
மாநில செய்திகள்

ஜெர்மனியில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கங்கள் வென்ற சேலம் பெண் மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

தினத்தந்தி
|
9 Aug 2023 7:41 PM IST

ஜெர்மனியில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கங்கள் வென்ற சேலம் பெண் மாற்றுத்திறனாளியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.

சேலம்,

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 8-வது விளையாட்டு போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு இந்திய பாராலிம்பிக் குழுவால் 19 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சேலம் கன்னங்குறிச்சி அன்னை இந்திரா நகரை சேர்ந்த நளினி (வயது 55) என்பவர் உள்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பங்கேற்றனர்.

இரட்டையர் பெண்களுக்கான பேட்மிண்டன், வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் நளினி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் பதக்கம் வென்ற நளினி தமிழகம் வந்தவுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தான் பெற்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அவரை அமைச்சர் வெகுவாக பாராட்டியதுடன் பரிசு வழங்கினார். அமைச்சருடன் நளினியின் தந்தை அருணாசலம், தாய் கஸ்தூரி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்