< Back
மாநில செய்திகள்
ரூ.4½ கோடியில் கட்டப்படும் வீடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சிவகங்கை
மாநில செய்திகள்

ரூ.4½ கோடியில் கட்டப்படும் வீடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தினத்தந்தி
|
25 Dec 2022 1:15 AM IST

சிவகங்கை அருகே இலங்கை தமிழர் முகாமில் ரூ.4½ கோடியில் கட்டப்படும் வீடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சிவகங்கை அருகே இலங்கை தமிழர் முகாமில் ரூ.4½ கோடியில் கட்டப்படும் வீடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இலங்கை தமிழர் முகாம்

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ரூ.4 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் 90 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.ஆர். பெரிய கருப்பன் ஆகியோர ்பார்வையிட்டனர். அவரிடம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் திட்ட பணிகள் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் யோகா பயிற்சி மற்றும் சிலம்ப பயிற்சி ஆகியவைகளை செய்து காண்பித்தனர். தொடர்ந்து கால்பந்து விளையாட்டு வீரர்களையும் பயிற்சியாளர்களையும் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

வரவேற்பு

முன்னதாக சிவகங்கை வந்த அவரை மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, நகர் கழக செயலாளரும் நகரசபை தலைவருமான துரை ஆனந்த், துணைத்தலைவர் கார் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன் தமறாக்கி ரவி, நகர் இளைஞர் அணி செயலாளர் அயூப்கான் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்யா மிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல் உறுப்பினர் டாக்டர் கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் பிரியங்கா பங்கஜம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்