பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
|பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார்.
நாமக்கல்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில், முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அவருடன் அமைச்சர் மதிவேந்தன் காலை உணவு சாப்பிட்டார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.