< Back
மாநில செய்திகள்
செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
10 July 2024 8:57 PM IST

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே பைட் (#FIDE) 'வுமன் கேண்டிடேட் மாஸ்டர்' பட்டத்தை வென்றிருக்கிறார் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகா. அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். 4 வயதிலிருந்தே செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் சர்வாணிகா, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

பல்வேறு சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்துள்ள தங்கை சர்வாணிகா, இப்போது புள்ளிகளின் அடிப்படையில் இந்த புதிய சாதனையை எட்டி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவர் இன்னும் பல உயரங்களை தொட நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்