< Back
மாநில செய்திகள்
விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி... இறுதி ஊர்வலம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி... இறுதி ஊர்வலம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

தினத்தந்தி
|
29 Dec 2023 2:41 PM IST

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.45 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணிகளில் உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் இறுதி சடங்கு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் எந்தவித இடையூறும் இல்லாமல் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்