< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் பேரிடர் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பரிசு பொருட்கள் - அமைச்சர் உதயநிதி வழங்கினார்
|24 Jan 2024 10:00 PM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1200 மீனவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை,
இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் படகுகளில் ஈடுபட்ட 1200 மீனவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.