செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து
|செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
சென்னை,
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி ஸ்லோவோனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா தரப்பில் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
" 45வது பிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று இந்திய அணி செஸ் விளையாட்டில் தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு ஒரு சிறப்பு வாழ்த்துகள்.
பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்." என தெரிவித்துள்ளார்.