< Back
மாநில செய்திகள்
திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் சிவெகணேசன் திறந்து வைத்தார்
கடலூர்
மாநில செய்திகள்

திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் சிவெகணேசன் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
16 April 2023 12:58 AM IST

திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.

திட்டக்குடி,

திட்டக்குடியை அடுத்த மேலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை மற்றும் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கூடுதல் வருவாய்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் வாயிலாக விவசாயிகளின் நெல் மூட்டைகளை நேரடியாக அரசு கொள்முதல் செய்வதனால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. நெல்லின் தரத்தை பொறுத்து விவசாயிகளுக்கு அதிக விலையில் நேரடியாக பணம் வழங்கப்படுகிறது. ஏஜெண்டுகள் தலையீடு இல்லாததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்கி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், செம்பியன், வி.பி.பரமகுரு, தியாகராஜன், மதியழகன், சுரேந்தர் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்