< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோயம்பேடு மார்கெட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு திடீர் விசிட்..! ஓடி வந்து கை குலுக்கிய வியாபாரிகள்...!
|8 Jan 2023 10:11 AM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் கழிவறை, குடிநீர் மற்றும் தொழிலாளர் தங்கும் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்தாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சென்னை,
சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் மார்கெட்டில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பின் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மார்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரங்களையும் முறைப்படுத்த திட்டம் உள்ளது. மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பண்டிகை கால சிறப்பு சந்தையின் போது இடைத்தரகர்கள் இடையூறு செய்வதை கட்டுப்படுத்துவோம். கோயம்பேடு சந்தையை மேம்படுத்த ஏற்கனவே ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை பெறப்பட்டு மேற்கொண்டு மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.