< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
323 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|28 July 2023 9:12 AM IST
323 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் மார்க்கெட்டில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் 180 மாணவிகள், கொளத்தூரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 143 மாணவ, மாணவிகள் என மொத்தம் 323 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) சரண்யா அறி, கவுன்சிலர் நாகராஜன் மற்றும் மண்டல அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.