< Back
மாநில செய்திகள்
மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும் - கலால்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

'மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும்' - கலால்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
23 May 2023 5:40 PM IST

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலால்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது கலால்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

குறிப்பாக மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மெத்தனால் விற்கபடுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்