< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

தினத்தந்தி
|
24 Jun 2023 9:02 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்