< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன்
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன்

தினத்தந்தி
|
2 July 2023 1:48 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அசோக் குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மன் அனுப்பியும் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்