< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

14 Jun 2023 2:14 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை அரசு டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஓமந்தூரார், இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரையால் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.