< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

தினத்தந்தி
|
10 Oct 2023 11:22 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை 6 மணியளவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சை பெற்றபின், மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்