< Back
மாநில செய்திகள்
மருத்துவமனையில் இருந்து  செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்- சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்- சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்

தினத்தந்தி
|
7 Dec 2023 8:00 AM IST

உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 12 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 15 ஆம் தேதி வரை செந்தில்பாலாஜியின் சிறைக்காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்