< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் ஆடினார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் ஆடினார்

தினத்தந்தி
|
8 Jun 2023 12:15 AM IST

திண்டிவனம் நகராட்சி பூங்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் ஆடினார்

திண்டிவனம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திண்டிவனம் நகராட்சி இருதயபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். இதையடுத்து இருதயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதியதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதைதொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரத்த அழுத்தம், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரை அடங்கிய பெட்டகத்தையும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கிய அவர் தொடர்ந்து திண்டிவனம் வகாப் நகரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், வக்கீல் ஆதித்தன், ஆடிட்டர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்