மயிலாடுதுறை கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
|மயிலாடுதுறை, கருவாழக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் ஆய்வு மற்றும் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.
முதலாவதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழகரை கிராமத்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதன் சிவாச்சாரியார் பிரசாதம் வழங்கினார்.
பின்ன கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் சீர்காழி பகுதியில் உள்ள கோயில்களில் ஆய்வு மற்றும் தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.