< Back
மாநில செய்திகள்
சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாருக்கு பரிசுத் தொகை - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
மாநில செய்திகள்

சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாருக்கு பரிசுத் தொகை - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

தினத்தந்தி
|
14 Feb 2024 11:44 PM IST

66 நூலாசிரியர்கள் மற்றும் 66 பதிப்பகத்தார்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

சென்னை,

தனித்துவம் மிக்க நம் தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் 33 வகைப்பாடுகளில் வரப்பெற்ற சிறந்த படைப்புகளை அளித்த நூலாசிரியர்களுக்கும் அந்நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தார்களுக்கும் ஆண்டுதோறும் காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் 1971-ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

பேராசிரியர்கள், தமிழறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து ஒவ்வொரு வகைப்பாட்டிலும் நூலைத் தெரிவு செய்து அந்நூலை எழுதிய நூலாசிரியர்க்கு ரூ.30,000/- பரிசுத் தொகையுடன் சான்றிதழும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10,000/- பரிசுத் தொகையுடன் சான்றிதழும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன.

அந்த வகையில், இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வெளியிடப்பெற்ற நூல்களுள் 33 வகைப்பாடுகளில் பரிசு பெற்ற நூல்களுக்கான 66 நூலாசிரியர்கள் மற்றும் 66 பதிப்பகத்தார்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்