< Back
மாநில செய்திகள்
சர்வதேச பட்டம் திருவிழா நிறைவு அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சர்வதேச பட்டம் திருவிழா நிறைவு அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு

தினத்தந்தி
|
16 Aug 2023 1:05 PM IST

மாமல்லபுரத்தில் 4 நாட்கள் நடந்த சர்வதேச பட்டம் திருவிழா நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா 4 நாட்கள் நடந்தது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த பட்டம் விடும் திருவிழா 4 நாட்கள் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாமல்லபுரம் கடற்கரை மைதானத்தில் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இந்தோனேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்கள் பட்டங்களை பறக்க விட்டனர். சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டன. குறிப்பாக, இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, சுறா மீன், குருவி, விலங்குகள், திமிங்கலம், கார்ட்டூன்கள், சூப்பர்மேன், டிராகன், பாம்பு, உள்ளிட்ட வடிவங்களில் வண்ண, வண்ண நிறங்களில் பட்டங்கள் பறக்க விடப்பட்டன.

நேற்று சுதந்தின தின விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வானில் சிறகடித்து பறந்த பட்டங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பட்டம் பறக்க விட்டு வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினரை கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்