< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

தினத்தந்தி
|
8 Oct 2023 12:55 AM IST

திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.

முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரபு, கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன் ஆ.கூடலூர் ராஜீவ்காந்தி, ஒன்றிய குழு துணை தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் ஆர்.லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கதலைவர் வீரபாண்டி ஜே.நடராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு 138 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி பேசினார்.

இதில் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, திருக்கோவிலூர் நகர தி.மு.க. அவை தலைவர் டி.குணா, அரகண்டநல்லூர் தி.மு.க. நகர செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, மனம்பூண்டி ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், அவை தலைவர் சக்திசிவம், நிர்வாகிகள் ஜெய்சங்கர், கணேசன், பிரபு, பிரகாஷ், அந்தோணியம்மாள், ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, எம்.ஏழுமலை, ராமமூர்த்தி, எஸ்.ஏழுமலை, அன்பு, தொ.மு.ச நிர்வாகி சரவணன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்