< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி ஆஜர்
|7 Nov 2022 4:02 PM IST
சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி இன்று காலை ஆஜரானார்.
வேலூர்,
விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கின் விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார்.