< Back
மாநில செய்திகள்
அமலாக்கத்துறையிடம்  அமைச்சர் பொன்முடி 2-வது நாளாக ஆஜர்- பல மணி நேரமாக நீடிக்கும் விசாரணை
மாநில செய்திகள்

அமலாக்கத்துறையிடம் அமைச்சர் பொன்முடி 2-வது நாளாக ஆஜர்- பல மணி நேரமாக நீடிக்கும் விசாரணை

தினத்தந்தி
|
18 July 2023 8:42 PM IST

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை,

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கவுதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை விடிய, விடிய விசாரணை நடத்திய பின், அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகியுள்ளனர். இருவரிடமும் தற்போது தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்