< Back
மாநில செய்திகள்
மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமாட்டேன்- அமைச்சர் பொன்முடி அதிரடி
சென்னை
மாநில செய்திகள்

மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமாட்டேன்- அமைச்சர் பொன்முடி அதிரடி

தினத்தந்தி
|
1 Nov 2023 2:04 PM IST

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை ஏற்கவில்லை. அதனால் நாளை நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் உள்ளார். அவருக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது என்ற காரணத்தை ஆளுநர் கூறமுடியுமா?

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

மேலும் செய்திகள்