< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி - அமைச்சர் பெரிய கருப்பன் பரிசு வழங்கினார்
சிவகங்கை
மாநில செய்திகள்

பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி - அமைச்சர் பெரிய கருப்பன் பரிசு வழங்கினார்

தினத்தந்தி
|
14 Jun 2023 12:15 AM IST

பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பரிசு வழங்கினார்.

சிங்கம்புணரி,

தென்னிந்திய அளவில் பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பரிசு வழங்கினார்.

மின்னொளி கபடி போட்டி

சிங்கம்புணரியில் தி.மு.க. சார்பில் தென்னிந்திய அளவில் 3-ம் ஆண்டு பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த போட்டி நடைபெற்றன. கபடி போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 18 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. நேற்று அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் பரிசு அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணிக்கும், இரண்டாவது பரிசு கர்நாடகா மாநிலம் மங்களூரு ஆழ்வாஸ் அணிக்கும், மூன்றாவது பரிசு சிங்கம்புணரி தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிக்கும், 4-வதாக ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. இதில் சிறந்த ரைடராக அந்தியூர் சக்தி பிரதர்ஸ் சவுந்தர், சிறந்த தடுப்பாற்றல் வீரராக கர்நாடகா மங்களூரு ஆல்வாஸ் அணியைச் சேர்ந்த விருந்தாவிற்கும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் அமைச்சர் பெரிய கருப்பன் கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். முதல் பரிசு அமைச்சர் பெரியகருப்பன் சொந்த நிதியில் ரூ. 1,0070-ம், 2-ம் பரிசு பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து ரூ. 75,070-ம், மூன்றாம் பரிசு முறையூர் ஊராட்சி தலைவர் எஸ்.என் சுரேஷ் சார்பில் ரூ. 50,070-ம் நான்காம் பரிசு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இந்தியன் செந்தில் சார்பில் ரூ.25,070-ம் வழங்கப்பட்டது. போட்டிக்கு நடுவராக புரோ கபடி நடுவர் சிவனேசன் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றினர்.

பரிசு

மேலும் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்தை அமைச்சர் பெரிய கருப்பன் சொந்த நிதியில் இருந்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஒன்றிய நகர தி.மு.க. மற்றும் சார்பு அணிகள் செய்திருந்தன. இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, அவைத்தலைவர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர அவைத்தலைவர் சிவக்குமார், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, நகர செயலாளர் கதிர்வேல், பேரூராட்சி மன்ற துணை தலைவர் இந்தியன் செந்தில், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார், நகர துணை செயலாளர் அலாவுதீன், மருத்துவர் அருள்மணி நாகராஜன், முன்னாள் சூரக்குடி ஊராட்சி தலைவர் அனந்தகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், பிரதிநிதி குடோன் மணி, தருண் மெடிக்கல் புகழேந்தி, நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் மணப்பட்டி பாஸ்கரன், இளைஞரணி மனோகரன், கிராம அம்பலம் சத்தியசீலன், மாவட்ட பிரதிநிதிகள் காளாப்பூர் செல்வகுமார், தனுஷ்கோடி, கவுன்சிலர்கள் ஜெயக்குமார், மீனா மனேகரன், முன்னாள் கவுன்சிலர் கதிர்காமம், முறையூர் ஊராட்சி தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்