< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணிய குறைவாக பேசவில்லை - முத்தரசன்
மாநில செய்திகள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணிய குறைவாக பேசவில்லை - முத்தரசன்

தினத்தந்தி
|
3 Sept 2022 1:45 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொஞ்சம் கூட அரசியல் நாகரிகத்தை அறியாதவராக இருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

திருச்சி,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொஞ்சம் கூட அரசியல் நாகரிகத்தை அறியாதவராக இருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் எந்த ஒரு இடத்திலும் கண்ணியக் குறைவாக பேசவில்லை.

ஆனால் பாஜகவை சேர்ந்த சிலர் நிதி அமைச்சரின் கார் மீது காலணி வீசி வன்முறையில் ஈடுபட்டதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியாயப்படுத்தி பேசுகிறார்.

தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர், மாநில தலைவர் காலணி வீசப்பட்டதை நியாயப்படுத்தி பேசுவது மட்டுமல்லாமல், கொஞ்சம் கூட அரசியல் நாகரிகமே அறியாதவராக அண்ணாமலை இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்