< Back
மாநில செய்திகள்
மதுபான விற்பனை குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை
மாநில செய்திகள்

மதுபான விற்பனை குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை

தினத்தந்தி
|
10 July 2023 10:22 AM IST

மதுபான விற்பனை குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 500 மதுபானக்கடைகள் மூடப்பட்ட நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 11 மணிக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்துகிறார்.

அதிக விலைக்கு மது விற்பதை தடுப்பது, பிரச்சினைக்குரிய கடைகளை மூடுவது பற்றியும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் கடைகள் சிசிடிவிக்கள் பொருத்துவது, கணினி வழி ரசிது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளன.

டாஸ்மாக் கடைகளில் புதிய அளவுகளில் மதுபானம் விற்பது குறித்தும், மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழு அமைப்பது, கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட உள்ளது.

மேலும் செய்திகள்