< Back
மாநில செய்திகள்
பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகள் - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
மாநில செய்திகள்

பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகள் - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

தினத்தந்தி
|
2 March 2024 10:24 PM IST

அமைச்சர் மூர்த்தி, தலைமையில் நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் இன்று (02.03.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின்போது பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 7 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

மேலும் செய்திகள்