< Back
மாநில செய்திகள்
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை
மாநில செய்திகள்

சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

தினத்தந்தி
|
13 Aug 2022 11:59 AM IST

சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை மற்றும் பண முடிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சைதாப்பேட்டையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு ரூ.1,300 மதிப்புள்ள மெகா குடை மற்றும் தலா ரூ.1,000 நிதி உதவி வழங்கினார்.

இதில், நடிகர் யோகிபாபு, மண்டல குழு தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், அவைத் தலைவர் எஸ்.குணசேகரன், கவுன்சிலர்கள் வக்கீல் எம்.ஸ்ரீதரன், தா.மோகன்குமார், ப.சுப்பிரமணி, வட்டச் செயலாளர்கள் எம்.நாகா, எஸ்.பி.கோதண்டம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்