< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் - கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் - கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
18 Jun 2023 6:05 PM IST

சாலைகள் மேம்படுத்தும் பணியை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கீழ் அணுவம்பட்டு பகுதியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடலூர் மாவட்டத்தில் 130 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்