< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி
|23 Jan 2024 9:31 AM IST
அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை,
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தநிலையில் நேற்று அமைச்சர் மதிவேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அமைச்சர் மதிவேந்தன் பூரண நலத்துடன் இருப்பதாகவும், இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.