< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் 113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

தினத்தந்தி
|
16 Jun 2022 7:15 PM IST

நாமக்கல்லில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., பொன்னுசாமி எம்.எல்.ஏ‌. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.7,630 மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.‌3.62 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு ரூ.3.82 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

113 பயனாளிகள்

அதேபோல் மகளிர் திட்டத்துறையின் சார்பில் 20 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் மற்றும் 10 பயனாளிகளுக்கு சலவை பெட்டிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு சலவை பெட்டிகள், கூட்டுறவு துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு பயிர்க்கடன், 4 பயனாளிகளுக்கு கால்நடை வளர்ப்புக்கான கடனுதவி என்பது உள்பட மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஷ்குமார் எம்.பி., பொன்னுசாமி எம்.எல்‌.ஏ. ஆகியோர் வழங்கினர்.

இதில் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்