< Back
மாநில செய்திகள்
உறிஞ்சி குழி தோண்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

உறிஞ்சி குழி தோண்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ்

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

கருங்கலில் தனது வீட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் தங்கராஜ் தனி ஆளாக கழிவுநீர் உறிஞ்சி குழி தோண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைராக பரவி வருகிறது.

கருங்கல்,

கருங்கலில் தனது வீட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் தங்கராஜ் தனி ஆளாக கழிவுநீர் உறிஞ்சி குழி தோண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைராக பரவி வருகிறது.

குப்பை இல்லா குமரி

குமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து வௌியேறும் கழிவு நீர்நிலைகளில் கலந்து தண்ணீர் மாசு படுவதை தடுக்கவும், பிளாஸ்டிக் இல்லா குமரியை உருவாக்கவும் 'குப்பை இல்லா குமரி' என்ற இயக்கம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் களியக்காவிளையில் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் இது குறித்தான விழிப்புணர்வு ஓட்டத்தை களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடத்தினார்.

தொடர்ந்து குப்பை இல்லா குமரி இயக்கம் வீடுகளில் கழிவுநீர் உறிச்சி குழி அமைப்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தானே குழி தோண்டினார்

இந்தநிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கருங்கலில் உள்ள தனது வீட்டின் முன்பு கழிவுநீர் உறிஞ்சி குழாய் அமைக்கும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் தனி ஆளாக மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் குழித்தோண்டினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது 'அனைத்து வீடுகளிலும் உறிஞ்சிக்குழி அமைக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த குழியை நானே தோண்டினேன்' என்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்