மதுரை
அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
|அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
மேலூர்
தமிழகத்தின் முதல் பல்லுயிர் சூழலியல் பாரம்பரிய தலமாக மேலூர் அருகே அரிட்டாபட்டியை தமிழக அரசு அறிவித்தது. அதனையடுத்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அரிட்டாபட்டியில் மலை பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை தலைவர் சுப்ரத் மொஹபத்ரா ஆகியோர் பார்வையிட்டனர்.
மலைகளில் உள்ள அபூர்வமான பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களையும், பல நூற்றாண்டு பழமையான பிரமி வட்ட தமிழ் எழுத்து கல்வெட்டுகள், குடவரை சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை அமைச்சர் மதிவேந்தனுக்கு காண்பித்து அரிட்டாபட்டி ஏழு மலைகளின் பாதுகாப்பு குழு செயலாளர் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்தார். தலைமை வன பாதுகாவலர் பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் குருசாமி, தபேலா, வனச்சரக அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.