< Back
மாநில செய்திகள்
திடீரென பெண்களுக்கு ஆரத்தி எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்
மாநில செய்திகள்

திடீரென பெண்களுக்கு ஆரத்தி எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

தினத்தந்தி
|
5 Feb 2023 9:54 AM IST

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கருங்கல்பாளையம் பகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்பொழுது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுக்க வந்தனர். ஆனால் அவர் எந்த பெண்களையும் ஆரத்தி எடுக்க விடாமல் அவரே அந்த பெண்களுக்கு ஆரத்தி எடுத்தார். இதனை பெண்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மேலும் செய்திகள்