< Back
மாநில செய்திகள்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மாநில செய்திகள்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினத்தந்தி
|
22 Dec 2023 2:25 PM IST

அமராவதி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94), வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அமராவதி அம்மாள் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அவருக்கும், அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்