< Back
மாநில செய்திகள்
பெரியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

தினத்தந்தி
|
17 Sep 2022 6:45 PM GMT

தூத்துக்குடியில் பெரியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் தி.மு.க. கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பெரியார் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

பாண்டவர்மங்கலத்தில் பெரியார் சிலைக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ம.தி.மு.க.- தே.மு.தி.க

பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் சரவணன், நகர இளைஞரணி முத்துகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தே.மு.தி.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இனாம் மணியாச்சி சந்திப்பில் தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் பெரியார் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்